ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார்.
‘காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிப்பு!’
ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் செப்டம்பர் 10- ஆம் தேதி வரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளது.
“விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்”- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!
டெல்லியில் அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜி20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு, உலகளாவிய பிரச்சனைகளை சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. தூய்மையான எரிசக்தி, காலநிலை மாற்றம், ரஷ்யா- உக்ரைன் போர், பொருளாதாரம், வர்த்தகம் விவாதிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.