கருணை மனு மீது குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய முடியாத வகையில் மசோதாவை மத்திய அரசு வரையறுத்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக் சுர்க்ஷா சன்ஹிதா என மாற்றவும், அந்த மசோதாவில் பல்வேறு திருத்தங்களைச் செய்து அமல்படுத்தவும் மத்திய அரசு முடிவுச் செய்துள்ளது.
அப்பா, மகனாக மிரட்டும் ஷாருக்கான்….. ‘ஜவான்’ ட்ரைலர் வெளியீடு!
அதன்படி, மரணத் தண்டனை குற்றவாளிகளின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதை உறுதிச் செய்யும் வகையில், இந்த சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் முடிவெடுத்துவிட்டால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாத வகையில், சட்டத் திருத்தும் செய்யப்பட்டுள்ளது.
ஒரு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தனித்தனியே அனுப்பும் கருணை மனுக்கள் அனைத்திற்கும் சேர்த்து, குடியரசுத் தலைவர் ஒரே முடிவெடுப்பார் என்றும், இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டால், குற்றவாளிகள் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்ற முறை இருந்தது.
முதன்முறையாக இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா….. வைரலாகும் வீடியோ!
இதனால் கொடூர குற்றங்களைப் புரிந்தவர்களுக்கான மரணத் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இப்படி ஒரு மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது.