Homeசெய்திகள்இந்தியாகுடியரசுத் தலைவர், பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம்!

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம்!

-

 

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
File Photo

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர்.

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, கிராமப் புற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கத் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தில் 370 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

இந்த நிலையில்,இந்த வழக்கை விசாரித்து வரும் மாநில காவல்துறையினர் நந்தியாலா பகுதிக்கு சென்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பாகிஸ்தான் அணியை அடக்குமா இந்திய அணி?

இதையடுத்து, கைது நடவடிக்கையைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு கைது விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

MUST READ