Homeசெய்திகள்இந்தியா3வது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது மத்திய அரசு - ஜனாதிபதி பாராட்டு!

3வது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது மத்திய அரசு – ஜனாதிபதி பாராட்டு!

-

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

நடந்து முடிந்த நாடளுமன்றா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து மக்களவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் மற்றும் சபாநாயகர் பதவியேற்பு நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது, மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பாஜக அரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். 2024 தேர்தலில் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது. அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது மத்திய அரசு. அவர்களுக்கு எனது பாராட்டு. என கூறினார்.

MUST READ