Homeசெய்திகள்இந்தியாகுடியரசுத் தலைவர் உரையின் போது மின்தடையால் சர்ச்சை!

குடியரசுத் தலைவர் உரையின் போது மின்தடையால் சர்ச்சை!

-

 

Photo: President Of India

ஒடிஷாவில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசிக் கொண்டிருக்கும் போது, மின்தடை ஏற்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த தி.மு.க. அரசு….. செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன?

ஒடிஷா மாநிலம், பாரிபாதாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழகத்தின் (Maharaja Sriram Chandra Bhanja Deo University) 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துக் கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தினார்.

விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்புரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென மின்தடை ஏற்பட்டது. எனினும், குடியரசுத் தலைவர் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். முற்பகல் 11.56 மணிக்கு ஏற்பட்ட மின்தடை 12.04 வரை சுமார் 8 நிமிடங்களுக்கு நீடித்தது.

பல்கலைக்கழக்தில் இருந்த ஜெனரேட்டரும் பழுதாகி இருந்ததால், பல்கலைக்கழக துணைவேந்தர் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மின்தடை இருந்த போதும் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அடர்ந்த வனத்தில் இருளுக்கு இணையாக ஒளியும் இருக்கும் என்கிற கவிதையை நினைவுக் கூர்ந்தார்.

ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், குடியரசுத் தலைவர் பேசிக் கொண்டிருக்கும் போதே 8 நிமிடங்களுக்கு மின்தடை ஏற்பட்டது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ