ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையால் வரும் காலங்களில் இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு வேலை கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளதாக எஸ் ஆர் எம் யூ பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தனியார் மயமாக்கலை தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு.
அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளனத்தின் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவரும் SRMU பொதுச்செயலாளருமான கண்ணையா நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி பலூன்களை பறக்கவிட்டு நூற்றாண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணையா,
ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் மக்களை நேரடியாக பாதிக்கும் என்கிற காரணத்தினால் போராட்டத்தை அறிவிக்க மறுக்கிறோம். பேச்சுவார்த்தைகள் மூலம் கோரிக்கைகள் ஓரளவு சரி செய்யப்பட்டு வருகின்றன.
யால் தற்போது பணியில் உள்ள இளைஞர்களுக்கும் வருங்கால இளைஞர்களுக்கும் பணி நிரந்தரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது?
வருங்காலத்தில் ஒன்றிய அரசு வேலை என்பதே கேள்விக்குறியாக தான் இருக்கும்.
2024 நாடாளுமன்ற தேர்தல் இருப்பதால் தனியார் மயமாக்கல் முயற்சி தற்காலிகமாக ஒன்றிய அரசு ஒத்தி வைத்துள்ளது என்றார்.
நூற்றாண்டு தொடக்க விழா இந்தியா முழுவதும் இன்று 100 இடங்களில் கொண்டாடப்படுவதாகவும் கண்ணையா தெரிவித்தார்.