புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலைக் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
புதுச்சேரி சிறுமி படுகொலை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த மார்ச் 02- ஆம் தேதி மாயமான நிலையில் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக, சிறுமியை கொலை செய்ததாக கருணாஸ் (வயது 19), விவேகானந்தனை (வயது 57) ஆகியோரை புதுச்சேரி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
சிறுமி நீதி வழங்கக்கோரி, புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள், பல்வேறு அரசியல்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த சூழலில், ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதனை வாங்க சிறுமியின் பெற்றோர் மறுத்தனர். குற்றவாளிக்கு கடும் தண்டனை வாங்கித் தரப்படும் என்ற உறுதியை ஏற்று சிறுமி உடலைப் பெற்றுக் கொண்டனர்.
சனாதன சர்ச்சை- வழக்குகளை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!
இதனிடையே, சிறுமியின் பெற்றோரை சந்தித்த புதுச்சேரி ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்ததுடன், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்; விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.