Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த பயணிகள்!

புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த பயணிகள்!

-

 

புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த பயணிகள்!

புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது.

கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, வடமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் சிறிய மற்றும் பெரிய நட்சத்திர விடுதிகளில் உள்ள 20,000 அறைகள் நிரம்பி வழிகின்றன.

ஹோட்டல்கள், மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வண்ண மயமான மின்ஒளி விளக்கு அலங்காரங்கள், உணவுத்திருவிழா, இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிக்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். இவற்றிற்கான டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல், புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் இன்று (டிச.31) பிற்பகல் 02.00 மணி முதல் நாளை (ஜன.01) காலை 09.00 மணி வரையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#Rewind 2023: ‘அதானி முதல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரை’- 2023- ல் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த தொகுப்பு!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருவோர் புதிய துறைமுகம் மற்றும் உப்பளம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் கட்டணமில்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்துக் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளனர்.

கடற்கரைச் சாலையில் இன்றிரவு 2 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 1,500- க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ