மேற்குவங்கத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான், மக்களவைத் தேர்தலில் தங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.
மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து
28 கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இடம் பெற்றுள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
சண்டிகர் மேயர் தேர்தலை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்தித்திருந்தது ஆம் ஆத்மி கட்சி. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் பஞ்சாப்பில் தனித்துப் போட்டியிடப் போவதாக பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் ராமராஜன் பட நாயகி
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 40 பேர் பரிந்துரை பட்டியலில் இருப்பதாகவும் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் ஏற்கனவே முரண்பாடுகள் உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பல தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.