Homeசெய்திகள்இந்தியாபஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு- 2 தமிழக வீரர்கள் மரணம்

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு- 2 தமிழக வீரர்கள் மரணம்

-

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு- 2 தமிழக வீரர்கள் மரணம்

பஞ்சாப் , பதின்டா ராணுவ முகாமில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பஞ்சாப் ராணுவ முகாம்  துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழப்பு!

பஞ்சாப் மாநிலம், பதின்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில், குண்டுகள் துளைகக்கப்பட்டு நான்கு ராணுவ வீரர்கள் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தனர். அவர்கள் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் இரண்டு வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கமலேஷ் என்பவரும் ஒருவராவார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வனவாசி அருகே சாணார்பட்டி ஊராட்சியில் உள்ள பனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலேஷ். பனங்காடு திமுக கிளைச் செயலாளரும், விசைத்தறிக் கூட உரிமையாளருமான ரவி , தாய் செல்வமணி என்பவரின் இளைய மகன் கமலேஷ் என்ற இளைஞர் தான் இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். 24 வயதான கமலேஷ், பிஏ பொருளாதார பட்டதாரி, திருமணமாகாத இவர் கடந்தா 2019 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். இதேபோல் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியைச் சேர்ந்த யோகேஷ் குமார் என்பவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

MUST READ