Homeசெய்திகள்இந்தியாஉச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்

-

உச்சநீதிமன்ற நீதிபதியாக மகாதேவன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நீதுபதி மகாதேவன் பதவி வகிக்க உள்ளார்.

1963 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் பிறந்த நீதிபதி மகாதேவன், 1989 ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, 24 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியில்புரிந்துவந்தார். தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ள அவர்,கடந்த அக்டோபர் 25, 2013 அன்று சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 14 ம் தேதி 2015 அன்று நிரந்தர நீதிபதியாகி, கடந்த மே 24, 2024 அன்று உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

வரி விதிப்பு தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள நீதிபதி ஆர்.மகாதேவன், கிட்டத்தட்ட அனைத்து சட்டப் பிரிவுகளிலும் பல குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் கோவில்கள் மற்றும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய இடங்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளார்.

தர்மபுரி அருகே தனியார் பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும்  அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் தொடர்பாக 75 வழிகாட்டுதல் அடங்கிய முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மறைந்த பிரபல எழுத்தாளர் மா.அரங்கநாதனின் மகனான நீதிபதி மகாதேவன் இலக்கிய ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ