ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளி
சோனியா காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளாகப் பார்க்கப்படும் ரேபரேலி மற்றும் அமேதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், அந்த இரு தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதில், ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தியும், அமேதி தொகுதியில் கிஸோரி லால் சர்மாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம், வயநாடு தொகுதியைத் தொடர்ந்து இரண்டாவது தொகுதியாக ரேபரேலியிலும் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.
கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால் இந்த தேர்தலில் தொகுதி மாறியுள்ளார் ராகுல்காந்தி. ரேபரேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.