ராகுல் காந்தி 6 ஆண்டிற்கு தேர்தலில் போட்டியிட தடை
இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல்காந்திக்கு அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலார் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
விவசாய பெருங்குடி மக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என்று சாதாரண எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோடி, லலித் மோடி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோடி உதவி செய்வதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அந்த செய்தி அப்பொழுது “தி இந்து” செய்தி வெளியிட்டிருந்தது.
அதே கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, “எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை,” என ராகுல் காந்தி பேசியதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் 2019 ல் குஜராத் மாநிலத்தில் சூரத் நீதிமன்றத்தில் பூர்ணேஷ் மோடி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நீதிபதிகள் நேற்று தீர்பளித்தனர். அதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்பளித்தனர். மேலும் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்துக்கொள்ள அவகாசம் வழங்கி தண்டனையை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையே 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மக்களவை சபாநாயகர் பறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ராகுல் காந்தி வரும் 6 ஆண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியினால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேல் நடவடிக்கை குறித்து மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை முடக்க பாஜக அரசு முதல் வெற்றியை பெற்றுள்ளது.