Homeசெய்திகள்இந்தியாராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்.....கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்…..கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!

-

 

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்.....கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!
File Photo

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 138 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சித் தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கவுள்ளது.

“ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தேன்”- முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி!

காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுத்த மாவட்டங்கள் குறித்தும், ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரைக் குறித்து பார்ப்போம்!

கர்நாடகா மாநிலத்தின் சாம்ராஜ் நகர், பெல்லாரி, மைசூரு, மாண்டியா, துமகூரு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். அந்த ஏழு மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளில் 36 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக, மைசூருவில் மட்டும் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வசப்படுத்தியுள்ளது. பெல்லாரி மாவட்டத்தை முழுவதுமாக காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

“காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே முதலமைச்சரைத் தேர்வு செய்வர்”- சித்தராமையா அறிவிப்பு!

லிங்காயத்து சமூக மக்கள் கணிசமாக வசிக்கும் 70 தொகுதிகளில் காங்கிரஸ் கை ஓங்கியது. லிங்காயத்து பகுதியில் காங்கிரஸ் 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

கர்நாடக தேர்தல் வெற்றியை அடுத்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

MUST READ