Homeசெய்திகள்இந்தியாஎதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் ராகுல் காந்தி? - சற்று நேரத்தில் வெளியாகிறது அறிவிப்பு!

எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் ராகுல் காந்தி? – சற்று நேரத்தில் வெளியாகிறது அறிவிப்பு!

-

- Advertisement -

"நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்"- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. பாஜக கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ளார். நாளை மாலை 6 மணிக்கு 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி. கடந்த இரண்டு தேர்தல்களிலும் யாருக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத நிலையில், இந்த முறை காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற மொத்தமுள்ள 543 எம்.பிக்களில் குறைந்தபட்சம் 10 சதவீத எம்.பி.க்களை வைத்திருக்க வேண்டும். அதாவது 54 எம்.பிக்களை வைத்திருக்க வேண்டு. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மாலை இது தொடர்பாக அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

MUST READ