ராகுல்காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் – கார்கே
ராகுல்காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் என்றும் அதானி விவகராதை திசை திருப்ப பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது என்றும் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.
இந்திய தூதரகம் தாக்கபடுவதை கண்டிக்காத ஒன்றிய அரசு அதானி விவகாரத்தை திசை திருப்ப ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கூறுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்க்கே கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டதொடரின் 7வது நாளான இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் மக்களவை எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதில் அதானி விவகாரத்தை நடப்பு கூட்டதொடர் முழுவதும் இரு அவையிலும் எழுப்ப முடிவு செய்யபட்டுள்ளது.
அதே நேரத்தில் ராகுல்காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார் என்றும் அதானி விவகராத்தை திசை திருப்பவே ராகுல்காந்தியை மன்னிப்பு கேட்க சொல்வதாக மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்கப்டுவதை கண்டிக்காத மத்திய அரசு ஜனநாயகத்தை பற்றி பேச கூடாது என விமர்சித்துள்ளார்.