Homeசெய்திகள்இந்தியாமக்களவையில் காரசார விவாதம் : தெறிக்கவிட்ட ராகுல் காந்தி.. டாப் பாயிண்ட்ஸ் இதோ..

மக்களவையில் காரசார விவாதம் : தெறிக்கவிட்ட ராகுல் காந்தி.. டாப் பாயிண்ட்ஸ் இதோ..

-

ராகுல் காந்தி

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவை கூட்டத்தொடரில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ராகுலின் பேச்சுக்கு உடனுக்கு உடன் எழுந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பதிலளித்தனர். இதன்மூலம் மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜக – காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது: “

1. நான் எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை.

2. மக்களவையில் சிவன் படத்தை காட்டி பேசிய ராகுல் காந்தி, சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பதே வன்முறையின் சின்னம் அல்ல. அகிம்சையின் சின்னம்.

ராகுல் காந்தி

3. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர். ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜகவோ, பிரதமர் மோடியோ பிரதிநிதிகள் அல்ல. உண்மையான இந்துக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். ஆனால் பாஜகவினர் நேரெதிராக உள்ளனர்.

4. பிரதமர் மோடி கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர். கடவுளுடன் நேருக்கு நேர் பேசிக் கொண்டிருப்பவர். பிரதமர் மோடி கடவுளின் அவதாரம். ( கிண்டலாக தெரிவித்தார்) காந்தியை ஆவணப் படம் மூலமே அவரை உலகம் அறிந்ததாகவும் அவர் கூறுகிறார். பிரதமர் மோடி வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் இதை அறிந்திருக்கலாம். சிவன் படத்தை காட்டியதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவிக்கவே, நான் காண்பிப்பது பதாகை அல்ல; ஆவணம் என ராகுல் காந்தி பதிலளித்தார்.

5. அக்னிவீர் திட்டம் ராணுவத்துக்கான திட்டமல்ல; மோடிக்கான திட்டம். இத்திட்டத்தை உருவாக்கியது ராணுவம் அல்ல. பிரதமர் மோடிதான். ‘Use and Throw’ முறையில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறைதான் பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டம். இந்த திட்டத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தால் அதை பாஜக அரசு வீர மரணமாக ஏற்காது.

6. மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? பிரதமர் ஏன் அங்கு செல்லவில்லை? பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை!.

ராகுல் காந்தி

7. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அதானி, அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அயோத்தியில் உள்ள தொழிலாளிகள், விவசாயிகள் விழாவிற்கு அழைக்கப்படவில்லை. அயோத்தி மேம்பாட்டு திட்டத்திற்கு ஏராளமான நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றிற்கு முறையாக இழப்பீடு வழங்கவில்லை. ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது என்?

8. நிட் தேர்வு வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது, 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளன. பணம் இருந்தால்தான் மருத்துவப் படிப்பு என்கிற நிலையை நீட் உருவாக்கியுள்ளது. நீட் குறித்து விவாதிக்க கோரினால் அரசு அதை பரிசீலிக்கவில்லை. நீட் குறித்து குடியரசுத் தலைவர் உரையிலும் எதுவும் இடம்பெறவுல்லை.

9. சபாநாயகராக நீங்கள் ( ஓம் பிர்லா) தேர்வு செய்யப்பட்ட போது உங்களுக்கு நானும் கை கொடுத்தேன், பிரதமர் மோடியும் கை கொடுத்தார். நான் கை கொடுத்தபோது நீங்கள் நிமிர்ந்து நின்று கை கொடுத்தீர்கள். பிரதமர் மோடி கைகொடுத்தபோது உடனே குனிந்து அவருக்கு கை கொடுக்கிறீர்கள். மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா அரசியல் சார்பு இல்லாமல் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

10. பிரதமர் மோடியின் உத்தரவால் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இன்றும் பல தலைவர்கள் சிறையில் இருக்கின்றனர். அமலாகத்துறையால் 55 மணிநேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டேன். அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன். என் எம்பி பதவியையும், அரசு இல்லத்தையும் பறித்தனர்.

11. எதிர்க்கட்சிகள் உங்கள் எதிரிகள் அல்ல. உங்கள் வேலையை எளிதாக்கவே நாங்கள் இங்கு அமர்ந்துள்ளோம். எதுவாக இருந்தாலும் கலந்தாலோசித்து செயலாற்றலாம்.” என்று பேசினார்.

 

MUST READ