Homeசெய்திகள்இந்தியாமத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.?

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.?

-

 

மோடி - அமித்ஷா

மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியமைக்கவுள்ளது.

‘தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023’- முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு பின்னடைவு!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 199 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி 82 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 15 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

அதேபோல், மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பா.ஜ.க. 152 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 76 தொகுதிகளிலும், பிற 02 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதனால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

தெலங்கானா, சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்?

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு மாநிலங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க. கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

MUST READ