
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட ஒன்பது எம்.பி.க்கள் நேற்று (ஆகஸ்ட் 21) பதவியேற்றுக் கொண்டனர். புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழ் என்றே சொல்லத் தெரியாத ஈபிஎஸ்க்கு புரட்சி தமிழர் பட்டமா?- வைத்திலிங்கம்
குஜராத் மாநிலத்தில் இருந்து பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்வாகிய ஜெய்சங்கர், ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவருடன் குஜராத் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்வான மூன்று பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.
மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட ஐந்து திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.