Homeசெய்திகள்இந்தியாமாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

-

- Advertisement -

 

மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!
Photo: Sansad TV/ Rajya Sabha

மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது.

“கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கிடுக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது.

சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்து பேசினர். விவாதம் நிறைவடைந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மீது மாநிலங்களவை தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்”- இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உருக்கம்!

மாநிலங்களவையில் இருந்த 215 உறுப்பினர்களும் மகளிர் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் கூட, மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்றும், இது வரலாற்று சிறப்புமிக்கது என்றும் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். இதன் மூலம் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற தேவையான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுக்கு மேலாக அபரிவித கிடைத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்களவையில் 454- 2 என்ற வாக்குகளில் மசோதா நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் எதிர்ப்பின்றி நிறைவேறியுள்ளது.

MUST READ