மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டார்.
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில், டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதவியேற்றுக் கொண்டார்.
மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
குறிப்பாக, தமிழ் மொழியில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் நீலகிரி மக்களவைத் தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.