‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்துள்ளது.
மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை- இல்லத்தரசிகள் கவலை
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை தாக்கல் செய்ய கடந்த 2023- ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைந்திருந்தது. இந்த குழுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட வல்லுநர் ஹரிஷ் சால்வே ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இதையடுத்து, ராம்நாத் கோவிந்த் குழு தேர்தல் ஆணையம், பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் அவதூறு வழக்கு!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து 18,626 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையில் தேர்தல் நடத்துவதால் பல பலன்கள் இருப்பதாக அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.