Homeசெய்திகள்இந்தியாபிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலம் திடீர் பாதிப்பு; மருத்துவர்கள் கண்காணிப்பு

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலம் திடீர் பாதிப்பு; மருத்துவர்கள் கண்காணிப்பு

-

- Advertisement -

டெல்லி:பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு நெற்று நள்ளிரவு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவின் பாரம்பரியம் மிக்க முக்கியமான தொழிலதிபர் ரத்தன் டாடா. அவருக்கு தற்போது வயது 86.. இந்த நிலையில் ரத்தன் டாடாவுக்கு நேற்று இரவு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 1 மணியளவில் ரத்தன் டாடா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருடைய ரத்த அழுத்தம் திடீரென அளவுக்கு அதிகமாக குறைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இப்போது மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல் நிலையைக் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

MUST READ