சோதனையை சாதனையாக மாற்றிய ரத்தன் டாடா !
ரத்தன் டாடா, புகழ்பெற்ற தொழில் அதிபர் மற்றும் சிறந்த சாதனையாளர். ஆனால் அவரது இளமை கால வாழ்க்கை எப்போதும் சோகமாகவே இருந்தது. ரத்தன் டாடா 4 முறை காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இருந்தும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
ரத்தன் டாடா லாஸ் ஏஞ்சல்ஸில் பணிபுரியும் போது, அவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அவர்களது உறவு நன்றாக சென்று கொண்டிருந்த போது , 1962 -ல் இந்திய-சீனா போர் நடந்தது. அப்போது அவர்களின் காதல் திட்டம் சீர்குலைத்தது. அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்களின் பெண்ணை இந்தியாவுக்கு அனுப்பத் தயங்கியதால் அந்த காதல் உறவு முறிந்துள்ளது.
பின்னர் டாடாவின் வாழ்க்கை மற்றொரு திருப்பத்தை கண்டது. அவருடைய வாழ்க்கையில் நடிகை சிமி கரேவால் வந்துள்ளார்.
நடிகை சிமி கரேவால் தோ படன், மேரா நாம் ஜோக்கர் மற்றும் கார்ஸ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.
சிமி கரேவால் உடனான உறவு அனைவராலும் அறிய பட்ட ஒன்றாக மாறியது.
2011 ஆண்டில் ஒரு நேர்காணலில் சிமி கரேவால், டாடாவை பற்றி தனது மணம் திறந்துள்ளார். அதில் டாடா ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் எனவும், அடக்கம், மற்றும் ஒரு போதும் யாருக்கும் எந்த பாவமோ அல்லது தீங்கும் செய்ய முடியாத ஒரு ‘முழுமையான’ மனிதர் என்று விவரித்தார். டாடாவைப் பொறுத்தவரை, பணம் ஒரு உந்து சக்தியாக இருக்கவில்லை என ஆழமாக சிமி கரேவாலுக்குள் இருந்த உணர்வு வெளிபட்டுள்ளது.
அவர்களின் காதல் உறவு முடிவுக்கு வந்தாலும், அவர்கள் பகிர்ந்து கொண்ட பிணைப்பு (THE BOND) பல ஆண்டுகளாக வலுவாக இருந்திருக்கிறது. மேலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாகத் இருந்துள்ளனர்.
மும்பையில் ரத்தன் டாடா காலமானதைத் தொடர்ந்து, சிமி கரேவால் சமூக ஊடகங்களில் உணர்ச்சிபூர்வமான அஞ்சலியைப் பகிர்ந்துள்ளார். அவருடன் பழகிய புகைப்படங்களின் தொகுப்பை வெளியிட்டு, “நீங்கள் சென்றுவிட்டீர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். உங்கள் இழப்பைத் தாங்குவது மிகவும் கடினம். விடைபெறுங்கள் நண்பரே” என்று எழுதியுள்ளார்.
முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ‘வேட்டையன்’ படக்குழு…. கேக் வெட்டி கொண்டாடிய லதா ரஜினிகாந்த்!
அவர்களின் காதல் முடிந்த பின்னரும், அவர்களின் நீண்ட நட்பு, அவர்கள் ஒரு காலத்தில் பகிர்ந்து கொண்ட ஆழமான உறவின் அடையாளமாக நிற்கிறது.
ரத்தன் டாடா 4 முறை காதலில் விழுந்து வாழ்க்கையில் சோதனைகளை சந்தித்தவர். அந்த சோதனைகளை படிகற்களாக மாற்றி தொழிலதிபராக வளர்ந்து, பலருக்கு வழிகாட்ட கூடிய வாழ்க்கையை வாழ்ந்து சாதனையாளராக மாறியவர்.