டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபா ஜடேஜா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரவீந்திர ஜடேஜா, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறந்த எடுத்துக்காட்டு என்றும், அவரைச் சந்தித்தது மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, அனைவருக்கும் சிறந்த முறையில் ஊக்கமளிப்பார் என நம்புவதாகவும் ரவீந்திர ஜடேஜா பதிவிட்டுள்ளார்.
தி.நகரில் ஆகாய நடைபாதையை திறந்துவைத்த முதலமைச்சர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக உள்ள ரவீந்திர ஜடேஜா, தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.