நிலவின் தரையிறங்கவுள்ள சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
“ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம், சுமார் ஒரு மாதத்தைக் கடந்தும் விண்ணில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, லேண்டரை வெற்றிகரமாகப் பிரித்து, உயரத்தையும், வேகத்தையும் வெற்றிகரமாகக் குறைத்துள்ள நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்க உள்ளது.
மதுரை மாநாடு- அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்கள்!
இந்த நிலையில், நிலவில் தரையிறங்க உள்ள லேண்டர் எடுத்த புகைப்படங்களை வெளியீட்டுள்ளது இஸ்ரோ. நிலவில் தரையிறங்க உகந்த இடத்தைத் தேர்வுச் செய்யும் வகையில் புகைப்படங்களை இஸ்ரோ எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும், ஆகஸ்ட் 19- ஆம் தேதி லேண்டர் எடுத்துள்ளது.