Homeசெய்திகள்இந்தியா1.86 லட்சம் கோடி வரி கட்டிய ரிலையன்ஸ்… இந்தியாவின் உச்சபட்சம் தொட்ட முகேஷ் அம்பானி..!

1.86 லட்சம் கோடி வரி கட்டிய ரிலையன்ஸ்… இந்தியாவின் உச்சபட்சம் தொட்ட முகேஷ் அம்பானி..!

-

- Advertisement -

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுளது. பட்டாசு வெடிக்காத குறையாக இதை மத்திய தர மக்கள் கொண்டாடி வருகிறார்கள். தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தில் ஒரு பகுதியை வரி என்கிற பெயரில் தூக்கி கொடுக்க வேண்டாம் என்கிற நிம்மதிதான் இதற்கு காரணம்.

ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு லாபம் ரூபாய் 4,863 கோடியாக அதிகரிப்பு!
Photo: Mukesh Ambani

இதற்கு நடுவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு புதிய சாதனையை படைத்ஹ்டிருக்கிறது. கடந்த 2023-2024 நிதியாண்டில் மட்டும் அந்த நிறுவனம் மொத்தம் 1.86 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வருமான வரியாக செலுத்தியிருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் தாக்கல் செய்த வருடாந்திர அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாயை வரியாகக் கட்டிய ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் அதைவிட 9 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வரி கட்டியிருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்திய இந்த 1.86 லட்சம் கோடி ரூபாய் வரி இந்தியாவின் மொத்த பட்ஜெட்டில் 4 சதவீத தொகை என கூறப்படுகிறது. இதன் மூலமாக கடந்த நிதியாண்டில் மிக அதிகமாக வரி கட்டிய நிறுவனம் என்கிற சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் படைத்திருக்கிறது.அம்பானி இல்லத் திருமண விழாவில் ஜொலிக்கும் சூர்யா - ஜோதிகா!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் வரிசையில் ரிலையன்ஸ் நிறுவனம் 48-வது இடத்தில் உள்ளதாக அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. அத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டில் முதல் முறையாக 10 லட்சம் கோடி ரூபாயை கடந்து இருப்பதாகவும் இந்த ஆண்டு அறிக்கை சொல்கிறது.

நாட்டின் பட்ஜெட்டில் 4 சதவீத தொகையை வருமான வரியாக செலுத்திய ரிலையன்ஸ் நிறுவனம், தங்களது ஏற்றுமதியாலும் நாட்டுக்கு பல கோடி ரூபாயை வருமானமாக ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

MUST READ