Homeசெய்திகள்இந்தியா"மீதமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற நடவடிக்கை"- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

“மீதமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற நடவடிக்கை”- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

-

- Advertisement -

 

RBI makes big announcement regarding Rs 2,000 currency notes

2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற காலக்கெடு முடிவடைந்த நிலையிலும், இன்னும் 10,000 கோடி ரூபாய் மதிப்பில், அந்த ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

உயர் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் 19- ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. கருப்புப்பணத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அவற்றை செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள அறிவுறுத்தியது.

அதன் பிறகு அக்டோபர் 07- ஆம் தேதி வரை காலக்கெடுவையும் நீடித்தது. வாய்ப்பைத் தவறவிட்டவர்கள், அக்டோபர் 08- ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்வு!

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இன்னும் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ரூபாய் நோட்டுகளையும் விரைவில் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ