Homeசெய்திகள்இந்தியாவங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை.......ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

-

 

rbi

வங்கிகளில் உரிமைக் கோரப்படாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் உள்ளது. அதனை எப்படி திரும்பப் பெறுவது என்ற சிக்கலுக்கு தீர்வுக் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் கோரிக்கை!

வங்கிகளில் வாடிக்கையாளர்களால் உரிமைக் கோரப்படாத பணம் குறித்த விவரங்களை அறிய, அதனை திரும்பப் பெற பிரத்யேக இணையதளத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ‘UDGAM’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் வாடிக்கையாளர்கள், தாங்களோ, தங்களது பெற்றோரோ, எப்போதோ கைவிட்டு விட்ட வங்கிக் கணக்கு, அதில் உள்ள பணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அறிய முடியும்.

‘சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்’- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!

முதற்கட்டமாக, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சவுத் இந்தியன் வங்கி உள்ளிட்ட ஏழு வங்கிகளில் உள்ள உரிமைக்கோரப்படாத பணம் குறித்த விவரத்தை அறிய முடியும். மற்ற வங்கிகளில் உள்ள கணக்கு விவரங்கள், அடுத்தடுத்த மாதங்களில் சேர்க்கப்படும். வங்கிகளில் வாடிக்கையாளர்களால் உரிமைக் கோரப்படாத பணத்தின் அளவு, கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 35,000 கோடி ரூபாயாக உள்ளது.

MUST READ