ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சென்னை வருகிறார் பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர்!
ஆறு உறுப்பினர்கள் அடங்கிய ரிசர்வ் வங்கியின் இரண்டு நாட்கள் நிதிக் கொள்கைக் கூட்டம், வரும் அக்டோபர் 04- ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வரும் அக்டோபர் 06- ஆம் தேதி கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளது.
பண்டிகைக் காலங்கள் தொடங்கியுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், பருவமழை பற்றாக்குறை, சர்வதேச சந்தையில் விலையேற்றம் போன்றவை உள்நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும் சூழல் உள்ளதையும், நிதிக்கொள்கை குழு கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது.
கூட்டணி முறிவு- மௌனம் கலைத்தார் எடப்பாடி பழனிசாமி!
முன்னதாக, நடப்பு நிதியாண்டு தொடக்கத்தில் இருந்து மூன்று முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்கோ வட்டி விகிதம் 6.50% நீடிக்கிறது. நாட்டின் சில்லறை பண வீக்கமும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.83% குறைந்துள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் நிர்ணயித்த வரம்பை விட, அதிகமாகவே உள்ளது. அதே நேரம், மொத்த விலை பணவீக்கம் எதிர்மறையில் உள்ளதும், முக்கிய துறைகளின் பண வீக்கமும் சாதகமாகவே உள்ளதால் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றன.