Homeசெய்திகள்இந்தியாஓடும் ரயில்களில் கொள்ளை! ஆந்திராவில் பரபரப்பு

ஓடும் ரயில்களில் கொள்ளை! ஆந்திராவில் பரபரப்பு

-

- Advertisement -

ஓடும் ரயில்களில் கொள்ளை! ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த இரண்டு ரயில்களில் பயணிகளை கத்தியை காண்பித்து மிரட்டி அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

காவாலி ரயில் கொள்ளை

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சிங்கராயகொண்டா- காவாலி ரயில் நிலையங்களுக்கு இடையே அடுத்தடுத்து ரயில்களில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கிச் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்த ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்2, எஸ்4, எஸ்5, எஸ்6, எஸ்7, எஸ்8 ஆகிய பெட்டிகளில் பயணிகளை கத்தியை காண்பித்து மிரட்டியும் அடித்து பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், செல்போன்கள் கொள்ளையடித்துவிட்டு அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு ஓடினர்.

இதனையடுத்து செகந்திராபாத்தில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலும் எஸ்1 மற்றும் எஸ்2 பெட்டிகளில் கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் குறித்து பயணிகள் காவலி ரயில்வே போலீசில் பயணிகள் புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

MUST READ