Homeசெய்திகள்இந்தியாராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது ஆதித்யா- எல்1 விண்கலம்!

ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது ஆதித்யா- எல்1 விண்கலம்!

-

 

ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது ஆதித்யா- எல்1 விண்கலம்!
Photo: ANI

சூரியனை ஆய்வுச் செய்வதற்காக பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா- எல்1 விண்கலம் குறித்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்துக் கண்காணித்து வருகின்றனர்.

விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “சூரியனை ஆய்வுச் செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா- எல்1 விண்கலம் வெற்றிகரமாகப் பிரிந்தது. சரியாக, 648 கி.மீ. உயரத்தில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா- எல்1 விண்கலம் தனியாகப் பிரிந்தது.

சுமார் 2,298 கி.மீ. உயரத்தில் இருந்து ஆதித்யா விண்கலம் தனித்து தனது பயணத்தைத் தொடர்கிறது. புவி சுற்றுவட்டப் பாதையில் ஆதித்யா- எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. ஆதித்யா- எல்1 விண்கலம் சரியான சுற்றுவட்டப்பாதையில் செல்கிறது. அடுத்தடுத்த சுற்றுகளைக் கடந்து மிக நீண்ட தூர பயணத்திற்கு பின் விண்கலம் எல்1 புள்ளியை அடையும்.

விண்கலத்தின் சூரிய மின் தகடுகள் சரியாக செயல்படத் தொடங்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் துயரம்…. பிரபல துணை நடிகர் ஆர்எஸ் சிவாஜி மறைவு!

இதனிடையே, ஆதித்யா- எல்1 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதையொட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

MUST READ