Homeசெய்திகள்இந்தியாநாளை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் ரோவர், லேண்டர்!

நாளை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் ரோவர், லேண்டர்!

-

 

'நிலவில் 8 மீட்டர் பயணித்த பிரக்யான் ரோவர்!'
Photo: ISRO

நிலவின் தென்துருவ பகுதியில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நாளை (செப்.22) தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலை

நிலவை ஆய்வுச் செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெளியேறிய விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தனது முதல் கட்ட பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. சூரிய ஒளியில் இயங்கும் தன்மைக் கொண்ட விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இருக்கும் இடத்தில் தற்போது இரவு நேர பகுதியாக இருப்பதால், அவை உறக்க நிலையில் உள்ளன.

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: செல்லூர் ராஜூ

இன்று (செப்.21) முதல் அங்கு பகல் நேரம் தொடங்கவிருப்பதால் பிரக்யான் ரோவர் மற்றும் லேண்டர் நாளை முதல் தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவை வடிவமைக்கும் போதே, சூரியஒளி வரும் போது தனக்கு தானே செயல்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ