சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,200 கோயில்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகிக்கிறது. இந்த நிலையில், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோயில்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி உள்ளிட்ட, எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!
உத்தரவை மீறி அனுமதி அளிக்கும் கோயில் அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் மற்றும் சடங்குகளைத் தவிர்த்து வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கும் கோயில் வளாகத்தைப் பயன்படுத்தக் கூடாது என கடந்த மார்ச் 30- ஆம் தேதி அன்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவுப் பிறப்பித்திருந்தது.