அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (செப்.06) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஜி20 மாநாடு, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் உள்ளிட்டவைக் குறித்து மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு
சனாதன தர்மத்தை இழிவாகப் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். எந்த மதத்தையும் தவறாகப் பேசக் கூடாது எனவும் சனாதன தர்மத்தை யாரேனும் தவறாகப் பேசினால் தக்க பதிலடி தரவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா- பாரத் சர்ச்சைத் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்டவர்களே பதில் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.