Homeசெய்திகள்இந்தியாசனிப்பெயர்ச்சி விழா- திருநள்ளாறு கோயிலில் சிறப்பு வழிபாடு!

சனிப்பெயர்ச்சி விழா- திருநள்ளாறு கோயிலில் சிறப்பு வழிபாடு!

-

 

சனிப்பெயர்ச்சி விழா- திருநள்ளாறு கோயிலில் சிறப்பு வழிபாடு!

சனிப்பெயர்ச்சியையொட்டி, திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் கோயிலில் சிறப்பு வைபவங்கள் நடைபெற்றன.

பிரதமரை நேரில் சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சனீஸ்வரர் பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று (டிச.20) மாலை 05.20 மணிக்கு இடம் பெயருகிறார். இதனை முன்னிட்டு, முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. குறிப்பாக, காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு அதிகளவு பக்தர்கள் வருகைத் தருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவான் வசந்த மண்டபத்தில் தங்கக் காக வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் கலந்து கொண்டார்.

“சீரமைப்பு, நிவாரணப் பணிகளுக்காக தற்காலிகமாக ரூபாய் 7,033 கோடியை ஒதுக்க வேண்டும்”- பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, உள்ளூர் மட்டும்மல்லாது, வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருநள்ளாறு கோயிலுக்கு வருகைத் தந்துள்ளனர்.

MUST READ