உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சரத்பாபு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் பரவியது. இதை அடுத்து நடிகர்கள் நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.
பின்னர் தான் சரத்பாபு உயிரிழந்து விட்டதாக வந்த செய்திகள் வதந்தி என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்த போது தான் கமல் , குஷ்பூ போன்ற பிரபலங்கள் எல்லாம் தங்களின் இரங்கலை நீக்கினர்.
சரத் பாபு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். அவர் சிகிச்சை பெற்று வந்த அறை மாற்றப்பட்டு இருக்கிறது . மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து வருகிறார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சரத் பாபுவிற்கு சிகிச்சை அளித்து வரும் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி என்கிற அந்த தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், சரத்பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது. அவரின் உடல்நிலை குறித்து எந்தவிதமான வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சரத்பாபு குடும்பத்தினரிடம் இருந்தோ ஏஐஜி மருத்துவமனையிடம் இருந்தோ அதிகாரப்பூர்வ அரிப்பு அறிவிப்பு வெளியாகும் வரைக்கும் அவரது உடல்நிலை பற்றி வெளியாகும் தகவலை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.