
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 08) நண்பகல் 12.00 மணிக்கு தொடங்கியது.
ஆடி மூன்றாவது வாரம் – காசிமேட்டில் மீன்கள் விலை உயர்வு
அப்போது பேசிய தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு, “பா.ஜ.க. ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை நீடிக்கிறது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டப்படி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவில்லை. இலங்கையில் 13 ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு அழுத்தம் கொடுக்கவில்லை.
சேது சமுத்திரத் திட்டம் என்னவானது? சேது சமுத்திரத் திட்டத்தைக் கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ்- தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளீர்கள். தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை. மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மத்திய அரசு தடுக்கவில்லை. மணிப்பூரில் சிறுபான்மையின மக்கள் 143 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் பற்றி மாநில முதலமைச்சரோ, நாட்டின் பிரதமரோ இதுவரை பேசவில்லை” என்று அடுக்கடுக்கான கேள்விகளையும், குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்தார்.
தாய் தமிழ் பள்ளிகள் – தமிழக அரசு உதவி வேண்டி கோரிக்கை
அதைத் தொடர்ந்து பேசிய, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, “மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங், உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.