தெலங்கானாவில் மாவோயிட்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த சண்டையில் 7 மாவோயிஸ்ட் இயக்கத்தினர் மரணம் அடைந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரம் மண்டலத்தில் போலீசாரும் மாவோயிஸ்ட் இயக்க தடுப்பு சிறப்பு படையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து சென்றனர். அப்போது சல்பாகா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் போலீசாரை கண்டதும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
போலீசார் எதிர் தாக்குதல் நடத்தியதில் 7 மாவோயிஸ்ட் இயக்கத்தினர் சுட்டு கொல்லப்பட்டனர். போலீசார் விசாரனையில் இறந்தவர்களில் யெல்லாண்டு மாவோயிஸ்ட் இயக்க செயலாளர் குர்சம் மங்கு என்கிற பாப்பண்ணா, ஏத்தூர்நகரம் மகாதேவ்பூர் செயலாளர் மல்லையா என்கிற மது , முசாக்கி தேவல் என்கிற கருணாகர், முசாகி ஜமுனா, ஜெய்சிங், கிஷோர், கமேஷ் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து இரண்டு ஏ.எகே. 47 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் பல ஆயுதங்கள் பறிமுதல் செய்து சடலங்கள் முலுகு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வக்ஃப் வாரியத்தை கலைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் பரபரப்பு