Homeசெய்திகள்இந்தியாபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை!

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை!

-

 

 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை!
Photo: Sidhant Sibal Official Twitter Page

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (Shanghai Cooperation Organisation) இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

“வங்கக்கடலில் புயல் உருவாகிறது”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

மே 4, 5 ஆகிய தேதிகளில் கோவா மாநிலம், பனாஜியில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, தனி விமானம் மூலம் கோவா வந்துள்ளார்.

அதேபோல், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இந்தியா வந்துள்ளனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசிக்கவுள்ளனர்.

“நிதியமைச்சர் கூறியது அப்பட்டமான பொய்”- ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!

மாநாட்டிற்கு இடையே வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தனித்தனியே சந்தித்துப் பேசவுள்ளனர். எனினும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ