
கச்சா எண்ணெய் கப்பல் மீதான டிரோன் தாக்குதலை அடுத்து கடற்படை போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.
மலையாள நடிகர்களை களமிறக்கும் தனுஷ்….’DD3′ அப்டேட்!
சவூதி அரேபியாவில் இருந்து மங்களூருவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்துக் கொண்டிருந்த எம்.வி.செம் என்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், கப்பல் தீப்பிடித்ததாகவும், பின்னர் தீ முழுவதும் அணைக்கப்பட்டதாகவும் தகவல் கூறுகின்றன.
எனினும், கப்பல் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், நடுக்கடலில் நின்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்பந்தரில் இருந்து 217 கடல்மைல் தொலைவில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், இந்தியாவின் கடலோர காவல்படை கப்பல் விக்ரம் விரைந்துள்ளது.
கடைசியில் ‘தளபதி 68’ பட டைட்டில் இது தானா?….வெளியான புதிய தகவல்!
இந்திய கடற்படையின் போர்க்கப்பல்களும் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலை நோக்கி விரைந்துள்ளது. இதனிடையே, கச்சா எண்ணெய் கப்பலில் இருக்கும் ஊழியர்கள் பத்திரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.