Homeசெய்திகள்இந்தியாஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!

ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!

-

 

ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!
File Photo

கர்நாடகா மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் அம்மாநில ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினர்.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேற்று (மே 18) இரவு சந்தித்துப் பேசினர். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தைக் கொடுத்து இருவரும் ஆட்சியமைக்க உரிமைக் கோரினர்.

இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் இனிப்புகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து, டி.கே.சிவக்குமார் ஆளுநரின் காலைத் தொட்டு ஆசி வாங்கினார்.

புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

ஆட்சியமைக்க உரிமைக் கோரியதைத் தொடர்ந்து, பதவியேற்க வருமாறு முறைப்படி இருவருக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, பதவியேற்பு விழா, பெங்களூருவில் உள்ள கண்டீவரா மைதானத்தில் நாளை (மே 19) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் 20 முதல் 25 பேர் வரை இடம்பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மொத்தம் 224 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவையில், 135 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ