Homeசெய்திகள்இந்தியாதேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல்?

தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல்?

-

- Advertisement -

தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க எந்த பரிந்துரையும் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்று மத்திய அரசு  மக்களவையில் தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல்?மக்களவை எம்.பி. ஆனந்த் பதாரியா மக்களவைத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு தனித்தனி வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படுவது ஏன்? எனவும், தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏதேனும் பரிந்துரை வழங்கி உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் மக்களவைத் தேர்தலுக்கும் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கும் ஒரே மாதிரியான வாக்காளர் பட்டியலில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் மாநிலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுவதால் தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும், இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலை வைத்து மாநில தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல் “ONE NATION ONE VOTER LIST” உருவாக்க இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த பரிந்துரையும் வரவில்லை எனவும் மத்திய அமைச்சர் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ