உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமராக பதவியேற்ற மோடி முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை அன்று சென்றார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சாலை பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் காரில் வருவதைக் கண்ட பொதுமக்களும் பாஜக தொண்டர்களும் சாலையோரம் நின்று கையசைத்து வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் காரில் பயணம் செய்தபோது பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு விழுந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Security breach ! Video of Slipper thrown at PM Modi’s bulletproof car in Varanasi has surfaced pic.twitter.com/IoZehxWZCl
— Megh Updates 🚨™ (@MeghUpdates) June 19, 2024
அந்த வீடியோவில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு ஒன்று விழுகிறது இதை கவனித்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் அந்த செருப்பை எடுத்து தூக்கி எரிகிறார்.
கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியமே காரணம் என விஜய் கண்டனம்.. (apcnewstamil.com)
பிரதமர் மோடி சென்ற கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பாஜகவினர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.