Homeசெய்திகள்இந்தியாசோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..

-

- Advertisement -
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி, அண்மையில் கூட மும்பையில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். கூட்டத்திற்கு பின்னர் குழு புகைப்படம், உணவு விருந்தில் கூட அவர் கலந்துகொண்டார். அதன்பின்னர் மீண்டும் டெல்லி திரும்பிய அவருக்கு, இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Sonia Gandhi - சோனியா காந்தி

இந்நிலையில் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் , விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் டெல்லி கங்காராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சோனியா காந்தி விரைவில் பூரண நலம் பெற்று , விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

MUST READ