
கேரளாவில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட 47% குறைந்திருப்பது தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிய வந்துள்ளது.
யோ யோ டெஸ்டில் 18.7 புள்ளிகள் எடுத்து அசத்திய சுப்மன் கில்!
கேரளா மாநிலத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காரணமாகும். இந்த நான்கு மாதங்களில் சராசரியாக 2,018.6 மி.மீ. மழை பெய்ய வேண்டும். கடந்த ஆண்டு 1,736 மி.மீ மழை பதிவான நிலையில், இந்தாண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 27- ஆம் தேதி வரை 1,702.3 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும்.
ஆனால் 894.4 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது சராசரி அளவை விட 47% குறைவாகும். இடுக்கியில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 27- ஆம் தேதி வரை 2,138 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 786.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 63% குறைவாகும்.
தங்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த நீரஜ் சோப்ரா!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் முல்லை பெரியாறு அணையை நம்பி சாகுபடியைத் தொடங்கியுள்ள தமிழக விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.