- Advertisement -
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
SETC சார்பில் வரும் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து படுக்கை வசதி, மிதவை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி உண்டு. முன்பதிவு மற்றும் விபரங்களை tnstc.in மற்றும் TNSTC செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.