எஸ்.பி.ஜி. என்றழைக்கப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படைப்பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 61.
சனாதன கருத்து- பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!
பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பான எஸ்.பி.ஜி. எனப்படும், சிறப்புப் பாதுகாப்புப் படையின் இயக்குநராக கடந்த 2016- ஆம் ஆண்டு அருண் குமார் சின்ஹா பொறுப்பேற்றார். கடந்த 1987- ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரின் பதவிக்காலம், முடிவடையவிருந்த நிலையில், சமீபத்தில் அவரது பதவிக்காலத்தை ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
செப்.13- ல் ‘இந்தியா’ ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்!
இந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் குமார் சின்ஹா, இன்று (செப்.06) சிகிச்சைப் பலனின்றி காலமானார்.