உலகஅரங்கில் இந்தியாவின் வர்த்தக முதலீடுகளை மேம்படுத்துவதற்கு இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, இலங்கை, ஓமான் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துக் கொண்டிருக்கும்போதே இலங்கை இரட்டை ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது. கடல்சார் பாதுகாப்பு என்ற வாக்குறுதி வெற்றுத்தனமாக மாறி, ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போகிறது சீனா.
பாகிஸ்தான் பணத்திற்காக பிச்சை எடுக்கிறது. பங்களாதேஷ் அரிசிக்காக பிச்சை எடுக்கிறது. இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடிக்காக கெஞ்சுகிறது. மாலத்தீவு மனிதாபிமான உதவிக்காக கெஞ்சுகிறது. இந்தியாவிற்கு எதிராக சதி செய்ய முயற்சிக்கும் போது இதுதான் நடக்கும்.
இதனை உணராமல் இலங்கை அதிபர் அனுர திசாநாயக்க இந்தியாவுடன் இரட்டை ஆட்டத்திற்கு தயாராகி விட்டார். சில நாட்களுக்கு முன்பு முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்து ந்ருக்கம் காட்டினார். சீனாவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு அணுக்கமாகவும் தன்னை காட்டிக் கொண்டார் அனுர. ஆனால், தற்போது மீண்டும் சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறார்.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக இலங்கையின் நிலம், நீர், வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். இந்நிலையில், சீன தூதுக்குழுவுடனான சந்திப்பின் போது அவரது இரட்டை ஆட்டம் அம்பலமாகி உள்ளது.
இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதியான அனுர திஸாநாயக்க ஏற்கனவே சீனாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டவர். நாட்டின் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இந்திய அரசு தூதரக வழிகளில் அவர்களுடன் சிறந்த உறவைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்கு இதுவே காரணம்.
மறுபுறம், சீன தூதுக்குழுவுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி திசாநாயக்க, சீனாவின் உதவிக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இந்தியாவை எரிச்சலூட்டும் ஹம்பாந்தோட்டை போன்ற திட்டங்களில் உறவுகளை வலுப்படுத்தவும், பங்காளித்துவத்தை அதிகரிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சீன அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் தேசியக் குழுவின் துணைத் தலைவரான குயின் போயாங் குழுவுடனான சந்திப்பின் போது, அனுர திசாநாயக்க, கடன் மறுசீரமைப்பு, பொருளாதார நெருக்கடியின் போது சீன அரசு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
உறவுகளை வலுப்படுத்தவும், மத்திய அதிவேக நெடுஞ்சாலை போன்ற முக்கிய திட்டங்களை விரைவுபடுத்தவும், கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நான் எதிர்பார்த்துள்ளேன். கொழும்பின் மேம்பாட்டுக்கு சீனா ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கிறேன்’’ என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை சீனா தொடங்கும் அதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது, சீனா இலங்கையில் கடல்சார் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக சீனாவின் கின் போயாங் தெரிவித்துள்ளார். இந்த உறவை தொடர்வது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
திசாநாயக்க சீனாவுடன் நெருக்கமாகி வருகிறார். சீன நிர்வாகத்தின் கீழ் உள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முழுமையடையாத வேலைகளை நிறைவு செய்வதை வலியுறுத்திய ஜனாதிபதி திஸாநாயக்க, கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சுற்றி வணிக மையங்கள், நிறுவனத் திட்டங்களைத் தொடங்குவதை விரைவுபடுத்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிகளின்போது சீனாவின் உதவிகள், சிறுவர்களுக்கான பள்ளி சீருடைகளை வழங்கியதற்கும் அனுர, சீனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சீனாவின் ஆதரவு தொடர்ந்து தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கடல்சார் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்குவதுடன் தொடர்புடைய திட்டங்களைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கின் போயோங் கூறினார்.
இலங்கைக்கு சிறந்த உலகளாவிய ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் சீன நிறுவனங்கள் ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ளதாகவும். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் எதிர்கால சீன பயணத்தின் போது அவரை அன்புடன் வரவேற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.