Homeசெய்திகள்இந்தியாஅதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது 'தேஜ்' புயல்!

அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!

-

- Advertisement -

 

அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது 'தேஜ்' புயல்!
Video Crop Image

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் உருவான ‘தேஜ்’ புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டலில் ரீ-ரிலீஸாகும் நாயகன் திரைப்படம்

வரும் அக்டோபர் 25- ஆம் தேதி அன்று அதிகாலையில் ஓமன் மற்றும் ஏமன் இடையே ‘தேஜ்’ புயல் கரையைக் கடக்கிறது. ‘தேஜ்’ புயலால் தமிழகத்தில் பாதிப்பு இருக்காது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தென்மேற்கு அரபிக்கடலில் ஏமனின் சமுத்ரா நகரில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவிலும், ஓமனின் சலாலா நகரில் இருந்து 690 கிலோ மீட்டர் தொலைவிலும் ‘தேஜ்’ புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயல் மேலும் வலுப்பெற்று நகரக்கூடும். தென் கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு அரபிக்கடலில் கடந்த அக்டோபர் 19- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது!

இது புயலாக வலுப்பெற்று, தற்போது ஓமன், ஏமன் இடையே அதிதீவிர புயலாக மாறியுள்ளது.

MUST READ